Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 02 ஜூன் (ஹி.ச)
தமிழக அரசு அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களின் பதவி மூப்பு பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதில் முதலமைச்சருக்கு அடுத்ததாக ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் இரண்டாவது இடத்திலும், பொதுப்பணிகள் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மூன்றாவது இடத்திலும் இடம்பெற்றுள்ளனர்.
பதவி மூப்பு பட்டியலில் முதலமைச்சர் விஜய் தலைமையில், சுகாதாரம், வருவாய், உணவு, எரிசக்தி, பள்ளிக்கல்வி, இயற்கை வளம், தொழில்துறை, உயர்கல்வி, சுற்றுலா, சிறுபான்மை நலம், சமூக நீதி, போக்குவரத்து, வீட்டு வசதி, பிற்படுத்தப்பட்டோர் நலம், கைத்தறி மற்றும் ஜவுளி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை, வெளிநாடுவாழ் தமிழர் நலம், தொழிலாளர் நலம், கூட்டுறவு, சமூக நலன், வேளாண்மை, பால்வளம், மனிதவள மேலாண்மை, இந்து சமயம் மற்றும் அறநிலையம் உள்ளிட்ட துறைகளின் அமைச்சர்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், நிதி மற்றும் திட்டமிடல், மீன்வளம், கால்நடை பராமரிப்பு, செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பம், வனத்துறை, வணிகவரிகள் மற்றும் பதிவுத்துறை, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் ஆகிய துறைகளின் அமைச்சர்களும் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
அமைச்சரவை நடைமுறைகளில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த பதவி மூப்பு பட்டியல், அரசு நிகழ்வுகள், அமைச்சரவை கூட்டங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளில் அமைச்சர்களின் முன்னுரிமை வரிசையை நிர்ணயிக்கும் வகையில் அமைந்துள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ