தவெக நிர்வாகிகள் மீது பாலியல் வன்முறை குற்றச்சாட்டிற்கு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - அண்ணாமலை வலியுறுத்தல்
தமிழ்நாடு, 02 ஜூன் (ஹி.ச.) தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே இளம்பெண்ணை வேலை வாங்கித் தருவதாக கூறி ஏமாற்றி, கூட்டு பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் இருவர் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு அதிர்ச்சியளிப்பதாக, பாஜக
பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து தி.மு.க. அரசு விவசாயிகளை ஏமாற்றி வருகிறது - அண்ணாமலை


தமிழ்நாடு, 02 ஜூன் (ஹி.ச.)

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே இளம்பெண்ணை வேலை வாங்கித் தருவதாக கூறி ஏமாற்றி, கூட்டு பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் இருவர் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு அதிர்ச்சியளிப்பதாக, பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைதள பதிவில்,

தூத்துக்குடி மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பாலமுருகன் மற்றும் தமிழக வெற்றிக்கழக நிர்வாகி ஜெயபால் ஆகியோர் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என கூறியுள்ளார்.

பெண்கள் பாதுகாப்பு குறித்து தேர்தல் பிரச்சார காலத்தில் பேசிய தவெக தலைவர் விஜய், தனது கட்சியினரே குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக கூறப்படும் நிலையில் என்ன பதில் அளிக்கப் போகிறார் என்றும் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், “மாற்று அரசியல்” என்று கூறி ஆட்சிக்கு வந்த தவெக, தற்போது திமுகவின் பாதையிலேயே பயணிக்கிறதா என்ற சந்தேகம் எழுவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

இந்த வழக்கில் தொடர்புடைய இருவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வகையில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / GOKILA arumugam