பெண்கள் பாதுகாப்பு விவகாரம் - எடப்பாடி பழனிசாமிக்கு தவெக பதிலடி
சென்னை, 02 ஜூன் (ஹி.ச.) தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம், சட்டம் ஒழுங்கு மற்றும் பெண்கள் பாதுகாப்பு பிரச்னைகமளை முன்வைத்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழக வெற்றி கழகம் தனது எக்ஸ் தளப் பதிவில் கடும் பதிலடி கொடுத்துள்ளது. அ
தவெக அலுவலகம்


சென்னை, 02 ஜூன் (ஹி.ச.)

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம், சட்டம் ஒழுங்கு மற்றும் பெண்கள் பாதுகாப்பு பிரச்னைகமளை முன்வைத்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழக வெற்றி கழகம் தனது எக்ஸ் தளப் பதிவில் கடும் பதிலடி கொடுத்துள்ளது.

அந்தப் பதிவில்,

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் அப்பாவி பொதுமக்கள் பலியானபோது அதற்கு உத்தரவிட்டது யார்? அப்போது காவல்துறை யார் கட்டுப்பாட்டில் இருந்தது?” என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

மேலும், அந்தச் சம்பவத்தை “டிவி பார்த்துத் தெரிந்துகொண்டேன்” என கூறியவர் யார் என்றும் தமிழக வெற்றி கழகம் விமர்சித்துள்ளது.

எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் அரசியல் பாரம்பரியம், கட்சியின் அமைப்பு வலிமை ஆகியவற்றை சுட்டிக்காட்டியுள்ள தவெக, அதிமுக தலைமையை கடுமையாக விமர்சித்து பல்வேறு குற்றச்சாட்டுகளையும் முன்வைத்துள்ளது.

அதேநேரத்தில், தற்போதைய தமிழக அரசு மக்கள் பாதுகாப்பு, பெண்கள் பாதுகாப்பு, போதைப் பொருள் தடுப்பு மற்றும் சட்டம் ஒழுங்கை உறுதியாகக் காக்க நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும், தவறு செய்பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் தொடரும் என்றும் தமிழக வெற்றி கழகம் தெரிவித்துள்ளது.

மேலும், எதிர்க்கட்சித் தரப்பின் விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில், அரசியல் கூட்டணி மற்றும் அறிக்கை வெளியீடுகள் தொடர்பாகவும் தமிழக வெற்றி கழகம் தனது பதிவில் விமர்சனங்களை முன்வைத்துள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam