Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 02 ஜூன் (ஹி.ச.)
சென்னையில் உள்ள வடபழனி முருகன் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள வள்ளி திருமண மண்டபத்தைப் புதுப்பிக்கும் பணிகளுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை, சென்னை உயர்நீதிமன்றம் மேலும் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
கோயில் நிதியை பயன்படுத்தி திருமண மண்டபங்களை கட்டவோ அல்லது புதுப்பிப்பு பணிகளை மேற்கொள்ளவோ கூடாது என்ற நீதிமன்ற உத்தரவை மீறி வடபழனி கோயிலில் கட்டுமானப் பணிகள் நடைபெறுவதாகக் கூறி தேவா என்பவர் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், வள்ளி திருமண மண்டபப் புதுப்பிப்பு பணிகளுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த தடையை நீட்டித்து உத்தரவிட்டதுடன், இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை, அறநிலையத் துறையின் பதிலுக்குப் பின்னர் நடைபெற உள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ