Enter your Email Address to subscribe to our newsletters

சேலம், 02 ஜூன் (ஹி.ச.)
காவிரியின் நீர்ப் பிடிப்பு பகுதிகளிலும் மேட்டூர் அணையின் நீர்ப் பிடிப்பு பகுதிகளிலும் கடந்த சில நாள்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
மழையின் காரணமாக இன்று(ஜூன் 2) காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 2,369 கன அடியிலிருந்து 4,312 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவைவிட அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறைவாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது
இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 79.26 அடியிலிருந்து 79.53 அடியாக உயர்ந்துள்ளது.
நீர் இருப்பு 41.49 டிஎம்சி ஆக உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b