Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 20 ஜூன் (ஹி.ச.)
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 58 கால்வாய் விவசாய நீர்ப்பாசனத் திட்டத்தில், 58 அடி மட்டத்திலிருந்தே உபரி நீரை வெளியேற்றும் நடைமுறையை நிரந்தர அரசாணை மூலம் செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் விஜய் அவரது முன்னிலையில் நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த் அவரிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.
மேலும், பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் மதுரை,தேனி மாவட்டங்களின் பொறுப்பு அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் அவரிடமும் இதுகுறித்து கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டன.
அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
58 கால்வாய் திட்டத்தின் கீழ் பயனடைந்து வரும் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, 67 அடியில் இருந்ததை , 58 அடி மட்டத்திலிருந்தே பாசனத்திற்கு தேவையான நீரை வெளியேற்றும் நடைமுறையை நிரந்தரமாக்கும் வகையில் அரசாணை வெளியிட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை மூலம் உசிலம்பட்டி தொகுதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு நிலையான நீர்ப்பாசன வசதி கிடைத்து, விவசாய உற்பத்தி மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படும் என பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உள்ளது.
Hindusthan Samachar / Durai.J