திருப்பதியில் செப்டம்பர் மாத தரிசன டிக்கெட்டுகள் 22-ந்தேதி வெளியீடு
திருப்பதி , 20 ஜூன் (ஹி.ச.) திருப்பதி ஏழுமலையான் கோவிலில் செப்டம்பர் மாதத்துக்கான தரிசன டிக்கெட்டுகள் வரும் 22-ந்தேதி ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் லட்சக்கணக்கான ப
A


திருப்பதி , 20 ஜூன் (ஹி.ச.)

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் செப்டம்பர் மாதத்துக்கான தரிசன டிக்கெட்டுகள் வரும் 22-ந்தேதி ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இதனால் பக்தர்களின் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில் ஒவ்வொரு மாதத்திற்குமான தரிசன டிக்கெட்டுகள் முன்கூட்டியே ஆன்லைனில் வெளியிடப்பட்டு வருகின்றன.

அதன்படி, செப்டம்பர் மாதத்துக்கான சிறப்பு நுழைவு தரிசனம், அறை முன்பதிவு மற்றும் பல்வேறு அர்ஜித சேவை டிக்கெட்டுகள் வரும் 22-ந்தேதி பல்வேறு கட்டங்களாக வெளியிடப்பட உள்ளன.

புரட்டாசி மாதத்தை முன்னிட்டு செப்டம்பர் மாதத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு பக்தர்கள் முன்கூட்டியே டிக்கெட்டுகளை பதிவு செய்து கொள்ள வேண்டும் என தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.

டிக்கெட் முன்பதிவின்போது ஆதார் அட்டை, மொபைல் எண் உள்ளிட்ட விவரங்கள் அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பக்தர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் முன்பதிவு செய்யலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA