ஆந்திரா உடன்வல்லி குகை பகுதியில் யோகா பயிற்சி - முதல்வர் சந்திரபாபு நாயுடு பங்கேற்பு
ஆந்திரா , 20 ஜூன் (ஹி.ச.) ஆந்திரப் பிரதேசம் உடன்வல்லியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க உடன்வல்லி கேவுஸ் பகுதியில் யோகா பயிற்சி நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. பிரபல யோகா குரு பாபா ராம்தேவ் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் ஆந்திர மாநில முதல்வர
A


ஆந்திரா , 20 ஜூன் (ஹி.ச.)

ஆந்திரப் பிரதேசம் உடன்வல்லியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க உடன்வல்லி கேவுஸ் பகுதியில் யோகா பயிற்சி நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.

பிரபல யோகா குரு பாபா ராம்தேவ் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் யோகாசனங்கள் மற்றும் பிராணாயாம பயிற்சிகள் நேரடியாக நடத்தப்பட்டன.

இந் நிகழ்ச்சியை முதல்வர் ஆர்வமுடன் பார்வையிட்டார்.

நிகழ்ச்சியில் பேசிய பாபா ராம்தேவ்,

முதல்வர் சந்திரபாபு நாயுடுவை “கர்மயோகி” என பாராட்டினார். மேலும் ஆந்திரப் பிரதேசத்தை ஆன்மிக மையமாக உருவாக்க வேண்டும்.

தலைநகர் அமராவதி நகரை “யோகா தலைநகரம்” போல வளர்க்கலாம் என்றும் அவர் கூறினார்.

பின்னர் பேசிய முதல்வர் சந்திரபாபு நாயுடு,

யோகா மற்றும் தொழில்நுட்பத்தை இணைத்து மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.

“சஞ்சீவனி” திட்டத்தின் மூலம் நோய் சிகிச்சையை விட நோய் தடுப்புக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

மேலும் மாநிலத்தில் பசுமை பரப்பை அதிகரித்தல், இயற்கை விவசாயத்தை ஊக்குவித்தல் ஆகியவற்றை அரசு முக்கிய இலக்காக கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

உலகளவில் யோகாவை பிரபலப்படுத்திய பிரதமர்

நரேந்திர மோடி அவர்களின் முயற்சியையும் இருவரும் பாராட்டினர்.

மொத்தத்தில், உடன்வல்லியில் நடைபெற்ற இந்த யோகா நிகழ்ச்சி, ஆந்திரப் பிரதேசத்தை ஆன்மிகம், ஆரோக்கியம் மற்றும் இயற்கை வாழ்க்கை முறை மையமாக மாற்றும் அரசின் திட்டங்களுக்கு வலுவான தளமாக அமைந்துள்ளது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA