அரசுப் பள்ளியில் முதலமைச்சர் புகைப்படம் மாட்டி ரீல்ஸ் - நடவடிக்கை எடுக்க அண்ணாமலை வலியுறுத்தல்
காஞ்சிபுரம், 20 ஜூன் (ஹி.ச.) காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே உள்ள ஒரு அரசுப் பள்ளி வகுப்பறையில், சுமார் 20-க்கும் மேற்பட்ட தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் சென்று, முதலமைச்சர் விஜய் புகைப்படத்தை வகுப்பறை சுவரில் மாட்டி, ரீல்ஸ் எடுத்து சமூக
அண்ணாமலை


காஞ்சிபுரம், 20 ஜூன் (ஹி.ச.)

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே உள்ள ஒரு அரசுப் பள்ளி வகுப்பறையில், சுமார் 20-க்கும் மேற்பட்ட தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் சென்று, முதலமைச்சர் விஜய் புகைப்படத்தை வகுப்பறை சுவரில் மாட்டி, ரீல்ஸ் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சம்பவத்திற்கு We The Leader இயக்கத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

கடந்த ஐந்து ஆண்டுகால ஆட்சியில் அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு மற்றும் தரம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகனுக்கு, அரசுப் பள்ளிகளின் பெருமையை மீட்டெடுக்கும் மிகப்பெரிய பொறுப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், ஆளுங்கட்சியினர் என்ற காரணத்தால் அரசுப் பள்ளிகளுக்குள் சென்று வகுப்புகளைத் தொந்தரவு செய்வது ஏற்கத்தக்கதல்ல என்றும், இதுபோன்ற செயல்பாடுகள் அரசுப் பள்ளிகளின் நிலையை மேலும் பாதிக்கும் என்றும் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

முதலமைச்சர் விஜய் இதுபோன்ற நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள மாட்டார் என நம்புவதாக தெரிவித்துள்ள அவர், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வகையில் கட்சியினருக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்குமாறு முதலமைச்சர் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரை வலியுறுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P