Enter your Email Address to subscribe to our newsletters

தர்மபுரி, 20 ஜூன் (ஹி.ச.)
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே அனுமந்தபுரம் கிராமத்திலிருந்து காரிமங்கலம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்ற சொன்னம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வேடியப்பன் (45), ராஜா (56) ஆகியோர் முதலிப்பட்டி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது காரிமங்கலத்தில் இருந்து பாலக்கோடு நோக்கி மாங்காய் லோடு ஏற்றி வந்த பிக்கனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த முனிராஜ் (28) ஓட்டிச் சென்ற பிக்கப் வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதியது.
இந்த விபத்தில் வேடியப்பன் மற்றும் ராஜா ஆகியோர் பலத்த காயமடைந்தனர். அப்பகுதி மக்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே விபத்து நிகழ்ந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மேலும், பிக்கப் வாகன ஓட்டுநர் முனிராஜ் மது போதையில் வாகனம் ஓட்டியதாக கூறப்படுவதால், அந்த கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam