அதிமுகவிலிருந்து விலகிய இயக்குனர் ஆர்.வி. உதயகுமார் த.வெ.க -வில் இணைய திட்டம்
சென்னை, 20 ஜூன் (ஹி.ச.) பிரபல திரைப்பட இயக்குநரும், அதிமுக மாநில கலைப்பிரிவு செயலாளருமான ஆர்.வி. உதயகுமார், அக்கட்சியில் இருந்து கடந்த ஜூன் 16 ஆம் தேதி விலகினார். இந்த நிலையில் அவர் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்தில் இணைய உள்ளத
அதிமுகவிலிருந்து விலகிய  இயக்குனர் ஆர்.வி. உதயகுமார் - த.வெ.க -வில் இணைய திட்டம்


சென்னை, 20 ஜூன் (ஹி.ச.)

பிரபல திரைப்பட இயக்குநரும், அதிமுக மாநில கலைப்பிரிவு செயலாளருமான ஆர்.வி. உதயகுமார், அக்கட்சியில் இருந்து கடந்த ஜூன் 16 ஆம் தேதி விலகினார்.

இந்த நிலையில் அவர் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்தில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை பனையூரில் அமைந்துள்ள தமிழக வெற்றி கழகத்தின் தலைமை அலுவலகத்தில் இந்த இணைப்பு விழா நடைபெறுகிறது.

கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த் முன்னிலையில், ஆர்.வி. உதயகுமார் அதிகாரப்பூர்வமாக கட்சியில் தன்னை இணைத்துக் கொள்கிறார்.

அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவராகவும், கலைப்பிரிவின் மாநிலச் செயலாளராகவும் பொறுப்பு வகித்து வந்த ஆர்.வி. உதயகுமாரின் இந்த முடிவு அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

அவருடன் அதிமுகவைச் சேர்ந்த மேலும் சில நிர்வாகிகள் மற்றும் பல்வேறு மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் தமிழக வெற்றி கழகத்தில் இணைய உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சின்ன கவுண்டர், எஜமான் உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய ஆர்.வி. உதயகுமார், தமிழ் சினிமாவில் கிராமிய மணம் கொண்ட படங்களுக்கு பெயர் பெற்றவர்.

தற்போது அவரது அரசியல் பயணம் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்துடன் தொடர உள்ளது.

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் தொடர்ந்து பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களை கட்சியில் இணைத்து வருகிறது.

இந்த வரிசையில் ஆர்.வி. உதயகுமாரின் வருகை கட்சிக்கு கூடுதல் பலம் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / vidya.b