Enter your Email Address to subscribe to our newsletters

திருவண்ணாமலை, 20 ஜூன் (ஹி.ச.)
உலக பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் கோவில் உள்ள திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் அதிகளவில் புழக்கத்தில் இருப்பதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து டிஎஸ்பி ராஜா தலைமையில் 75-க்கும் மேற்பட்ட போலீசார் கொண்ட குழு கிரிவலப் பாதை முழுவதும் இன்று காலை முதல் அதிரடி சோதனையில் இறங்கியது.
கிரிவலப் பாதையோரம் தங்கியுள்ள சாதுக்கள் மற்றும் சாலையோர வியாபாரிகள் குறிவைக்கப்பட்டு இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.
பவுர்ணமி கிரிவலம் மற்றும் கார்த்திகை தீபத் திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் இந்த 14 கி.மீ கிரிவலப் பாதையில், போதைப் பொருள் விற்பனை மற்றும் பயன்பாட்டை முற்றிலும் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சோதனையின்போது சந்தேகத்திற்கிடமான நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டதுடன், அவர்களின் உடைமைகளும் பரிசோதிக்கப்பட்டன.
பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், புனிதத் தலத்தின் புனிதத்தை காக்கவும் இதுபோன்ற சோதனைகள் தொடரும் என டிஎஸ்பி ராஜா தெரிவித்தார்.
மேலும் பொதுமக்கள் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகளை கண்டால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
Hindusthan Samachar / vidya.b