3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி - இந்திய அணியில் ஹர்ஷித் ராணா சேர்ப்பு
சென்னை , 20 ஜூன் (ஹி.ச.) இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு ஆட்டங்களிலும் இந்திய அணி எளிதில் வெற்றி பெற்று, தொடரை 2-0
A


சென்னை , 20 ஜூன் (ஹி.ச.)

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகிறது.

இந்த தொடரின் முதல் இரண்டு ஆட்டங்களிலும் இந்திய அணி எளிதில் வெற்றி பெற்று, தொடரை 2-0 என்ற கணக்கில் ஏற்கனவே கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில், இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று (சனிக்கிழமை) பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெறுகிறது.

இந்தப் போட்டிக்கான இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா சேர்க்கப்பட்டுள்ளார்.

காயம் காரணமாக அணியில் இருந்து விலகியிருந்த அவர், தற்போது உடல்தகுதியை நிரூபித்ததைத் தொடர்ந்து இந்திய அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA