Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 20 ஜூன் (ஹி.ச.)
தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகே நேற்று இரவு ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் சிலர் மது அருந்திக் கொண்டிருந்தனர்.
அப்போது அவர்களுக்குள் திடீரென வாக்குவாதம் மூண்டு கைகலப்பாக மாறியது. இந்த மோதலில் ஜார்கண்ட் தொழிலாளி ஒருவர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தூத்துக்குடி நகர காவல் துறையினர், உயிரிழந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த கொலை தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார், சிவா, ஜேம்ஸ், பூமிநாதன், காசாலி ஆகிய நான்கு பேரை கைது செய்தனர்.
முதற்கட்ட விசாரணையில், மது போதையில் ஏற்பட்ட தகராறே கொலைக்கு காரணம் எனத் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட நான்கு பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
வெளி மாநில தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் தூத்துக்குடி பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b