Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 20 ஜூன் (ஹி.ச)
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அமைக்கப்படவுள்ள விமான பயிற்சி மையத்தின் கட்டுமானப் பணிகளை கண்காணிப்பதற்காக சுயாதீன பொறியாளரை நியமிக்க தமிழக அரசு டெண்டர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
விமான ஓட்டுநர் பயிற்சி மற்றும் விமான பராமரிப்பு தொடர்பான நவீன உள்கட்டமைப்பு வசதிகளுடன் இந்த மையம் உருவாக்கப்படவுள்ளது.
கட்டுமானப் பணிகளின் தரம் மற்றும் முன்னேற்றத்தை மேற்பார்வையிடும் பொறுப்பிற்காக தகுதி வாய்ந்த ஆலோசனை நிறுவனங்கள் மற்றும் பொறியாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (TIDCO) மூலம் டெண்டர் நடைமுறை மேற்கொள்ளப்படுகிறது. டெண்டர் ஆவணங்களை TIDCO மற்றும் தமிழக அரசின் மின்னணு டெண்டர் இணையதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூர்த்தி செய்யப்பட்ட டெண்டர் விண்ணப்பங்களை ஜூலை 15ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தென் தமிழகத்தில் விமானப் பயிற்சி மற்றும் விமானத் துறை சார்ந்த திறன்களை மேம்படுத்தும் நோக்கில் இந்த விமான பயிற்சி மையம் அமைக்கப்படுகிறது.
இதன் மூலம் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் உள்ளூரிலேயே தரமான விமானப் பயிற்சியைப் பெறும் வாய்ப்பு உருவாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / P YUVARAJ