Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 20 ஜூன் (ஹி.ச)
தமிழ்நாடு அரசின் எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கைக்காக அமைக்கப்பட்டுள்ள குழுவில் ஒரு பெண் உறுப்பினர் கூட இடம்பெறாதது வருத்தமளிப்பதாக தெரிவித்துள்ளார் கனிமொழி.
இதுகுறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட அவர்,
பல்வேறு சவால்களைத் தாண்டி திரைத்துறையில் கலைஞர்களாகவும், தொழில்நுட்ப வல்லுநர்களாகவும் சிறப்பாகப் பணியாற்றி வரும் பெண்கள் ஏராளமாக உள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி துறையில் பெண்களின் பங்களிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அவர்களுக்கு உரிய அங்கீகாரமும் பிரதிநிதித்துவமும் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மாணவர் சேர்க்கை போன்ற முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் குழுக்களில் பெண்களுக்கு உரிய இடம் வழங்கப்படுவது பாலின சமத்துவத்தையும், உள்ளடக்கிய நிர்வாக அணுகுமுறையையும் உறுதி செய்யும் என்றும் கனிமொழி தெரிவித்துள்ளார்.
எனவே, இதுபோன்ற குழுக்களை அமைக்கும் போது பெண்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தனது பதிவின் மூலம் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ