Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 20 ஜூன் (ஹி.ச.)
சென்னை பனையூரில் சிலர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.
இந்த நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழக வெற்றிக் கழகத்தின் வளர்ச்சி, சட்டப்பேரவை நேரடி ஒளிபரப்பு மற்றும் கட்சியில் இணையும் நிர்வாகிகள் குறித்து கருத்து தெரிவித்தார்.
அவர் கூறுகையில்,
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற தெளிவான நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறார். மக்களுக்கான பல்வேறு திட்டங்களை முதல்வர் தீட்டி வருவதால், இயக்கத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதன் காரணமாக பலரும் கட்சியில் இணைந்து இயக்கத்திற்கு வலிமை சேர்த்து வருகின்றனர் என்றார்.
மேலும், அதிமுகவில் இருந்து இன்று எங்கள் இயக்கத்தில் இணைவோர், திமுகவுடன் கூட்டணி அமைக்கலாம் என்ற முந்தைய சிந்தனை தவறானது என்பதை உணர்ந்ததால்தான் இங்கு வந்துள்ளனர். தமிழகத்தின் எதிர்காலத்திற்கான புதிய திட்டங்களை நாங்கள் கொண்டு வருவோம் என்று தெரிவித்தார்.
சட்டப்பேரவை நேரடி ஒளிபரப்பு தொடர்பாக பேசிய அவர், கடந்த ஆட்சியில் சட்டப்பேரவை நடவடிக்கைகள் முழுமையாக நேரடி ஒளிபரப்பாகவில்லை. முதல்வர் பேசும் காட்சிகள் மட்டுமே ஒளிபரப்பாகும்; மற்ற உறுப்பினர்கள் பேசுவது மக்களிடம் சென்றடையாது. தற்போது அந்த நிலையை மாற்றி நேரடி ஒளிபரப்பை வெற்றிகரமாக நடத்தி வருகிறோம். இதில் சில குறைபாடுகள் இருக்கலாம். இருப்பினும் யாரிடமும் பாகுபாடு காட்டாமல் செயல்பட அமைச்சர் ராஜ்மோகன் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்நிலையில் தற்போது அவர்கள் கேள்வி எழுப்புவது வேடிக்கையாக உள்ளது என்றார்.
மேலும், இதுவரை எங்கள் கட்சியில் இணைந்தவர்கள் மீது எந்தவித குற்றச்சாட்டுகளும் இல்லை என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
Hindusthan Samachar / P YUVARAJ