ஜனாதிபதி திரவுபதி முர்மு பிறந்தநாள் -ராகுல் காந்தி வாழ்த்து
புதுடெல்லி , 20 ஜூன் (ஹி.ச.) இந்தியாவின் முதல் பழங்குடியின பெண் ஜனாதிபதியான திரவுபதி முர்மு இன்று தனது 68-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
A


புதுடெல்லி , 20 ஜூன் (ஹி.ச.)

இந்தியாவின் முதல் பழங்குடியின பெண் ஜனாதிபதியான திரவுபதி முர்மு இன்று தனது 68-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ராகுல் காந்தி ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில்,

இந்தியாவின் ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

அவர் நல்ல ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளுடனும் வாழ எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA