டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி ஆர்ப்பாட்டம் – பலத்த போலீஸ் பாதுகாப்பு
புதுடெல்லி , 20 ஜூன் (ஹி.ச.) டெல்லியில் அபிஜீத் திப்கே தலைமையிலான “கரப்பான்பூச்சி ஜனதா கட்சி” சார்பில் இன்று மீண்டும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. ஜந்தர் மந்தரில் பிற்பகல் 1 மணியளவில் நடைபெற உள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில், டெல்லியின் பல்வேறு பகுதிகளிலி
A


புதுடெல்லி , 20 ஜூன் (ஹி.ச.)

டெல்லியில் அபிஜீத் திப்கே தலைமையிலான “கரப்பான்பூச்சி ஜனதா கட்சி” சார்பில் இன்று மீண்டும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

ஜந்தர் மந்தரில் பிற்பகல் 1 மணியளவில் நடைபெற உள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில், டெல்லியின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் அண்டை மாநிலங்களிலிருந்தும் ஆதரவாளர்கள் திரளாக பங்கேற்க உள்ளனர்.

இதற்காக அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளனர்.

இதனை முன்னிட்டு தலைநகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

முக்கிய இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதுடன், சி.சி.டி.வி. கேமராக்கள் மூலம் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், உடலில் அணியக்கூடிய கேமராக்கள்

(Body Worn Cameras) மூலம் போலீசார் நிகழ்வுகளை பதிவு செய்யும் ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்தின் முக்கிய நுழைவு மற்றும் வெளியேறும் பகுதிகளில் வாகன சோதனைகள் தீவிரமாக நடத்தப்பட உள்ளன.

இதற்கிடையில், சமூக வலைதளத்தில் “கரப்பான்பூச்சி ஜனதா கட்சி” என்ற பெயரில் தொடங்கப்பட்ட பக்கம், ஒரு காலத்தில் நகைச்சுவை பதிவுகளால் கவனம் பெற்றதாகவும், பின்னர் அது பெரும் அளவில் பின்தொடர்பாளர்களை பெற்றதாகவும் கூறப்படுகிறது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA