Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி , 20 ஜூன் (ஹி.ச.)
இந்தியாவின் முதல் பழங்குடியின பெண் ஜனாதிபதியான திரவுபதி முர்மு இன்று தனது 68-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி மற்றும் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
ஜனாதிபதி திரவுபதி முர்முவின் துணிச்சல், எளிமை, பணிவு மற்றும் பொதுச்சேவைக்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு தொடர்ந்து உத்வேகம் அளித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தனது நீண்டகால பொதுவாழ்வில் அவர் தேசத்திற்கு சிறப்பாக சேவையாற்றியிருப்பதுடன், குறிப்பாக நலிந்த மற்றும் விளிம்புநிலை மக்களின் நலனில் மிகுந்த அக்கறை செலுத்தி வருவதாகவும் பாராட்டியுள்ளார்.
இந்தியாவின் வளர்ச்சிக்கான அவரது அர்ப்பணிப்பு மிகவும் ஊக்கமளிப்பதாக தெரிவித்துள்ள பிரதமர், தேச சேவையில் அவர் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் தொடர்ந்து விளங்க வேண்டும் என்று வாழ்த்தியுள்ளார்.
இதேபோல் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
ஜனாதிபதி திரவுபதி முர்மு நலிந்த மக்களின் நலனுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருவதுடன், தேச சேவைக்காக தன்னை அர்ப்பணித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் சமூக நலனுக்கான அவரது அர்ப்பணிப்பு நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு உத்வேகமாக திகழ்வதாகவும் தெரிவித்துள்ளார்.
எளிமை, பணிவு மற்றும் பொதுச்சேவைக்கான உறுதியான அர்ப்பணிப்பால் அவரது வாழ்க்கைப் பயணமும் பொதுவாழ்வும் சிறப்புமிக்கதாக அமைந்துள்ளதாக கூறியுள்ள அவர், ஜனாதிபதி திரவுபதி முர்மு நீண்ட, ஆரோக்கியமான மற்றும் நிறைவான வாழ்க்கை வாழ வாழ்த்தியுள்ளார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA