டாஸ்மாக் கடை முன்பு மர்ம முறையில் இறந்து கிடந்தவரால் பரபரப்பு
நீலகிரி, 20 ஜூன் (ஹி.ச) நீலகிரி மாவட்டம் குன்னூர் அருவங்காடு பகுதியில் செயல்பட்டு வரும் அரசு டாஸ்மாக் கடையின் முன்பாக இன்று காலை வாலிபர் ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் கடைக்கு வந்தவர்கள் அதிர்ச்
Death


நீலகிரி, 20 ஜூன் (ஹி.ச)

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருவங்காடு பகுதியில் செயல்பட்டு வரும் அரசு டாஸ்மாக் கடையின் முன்பாக இன்று காலை வாலிபர் ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.

இதனைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் கடைக்கு வந்தவர்கள் அதிர்ச்சியடைந்து, உடனடியாக இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அருவங்காடு போலீசார், மயங்கிக் கிடந்த வாலிபரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக, தெரிவித்தனர்.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்த வாலிபர் மஞ்சுதளா ஹட்டி கிராமத்தைச் சேர்ந்த பாண்டுரங்கன் என்பவரின் மகன் மணிகண்டன் (வயது 30) என்பது தெரிய வந்தது.

மணிகண்டனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

அவர் அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் உயிரிழந்தாரா, அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் உடற்கூராய்வு முடிவுகளின் அடிப்படையில் அடுத்தகட்ட விசாரணை நடத்தப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Hindusthan Samachar / ANANDHAN