அமைச்சர் ஆய்வுக்கு முன் ராமநாதசாமி கோயிலில் நறுமண ஸ்பிரே தெளிப்பு -பக்தர்கள் அதிருப்தி
ராமேஸ்வரம், 20 ஜூன் (ஹி.ச.) ராமேஸ்வரம் ராமநாதசாமி திருக்கோயிலில் ஆய்வுக்காக வந்த அமைச்சர் மதன் ராஜா செல்லும் வழித்தடங்களில் கோயில் ஊழியர்கள் நறுமண ஸ்பிரே மற்றும் பினாயில் தெளித்து சுத்தம் செய்த சம்பவம் பக்தர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் மத்தியில்
ராமநாதசாமி கோயில்


ராமேஸ்வரம், 20 ஜூன் (ஹி.ச.)

ராமேஸ்வரம் ராமநாதசாமி திருக்கோயிலில் ஆய்வுக்காக வந்த அமைச்சர் மதன் ராஜா செல்லும் வழித்தடங்களில் கோயில் ஊழியர்கள் நறுமண ஸ்பிரே மற்றும் பினாயில் தெளித்து சுத்தம் செய்த சம்பவம் பக்தர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தது.

ராமநாதபுரம் மாவட்ட பொறுப்பு அமைச்சரும், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சருமான மதன் ராஜா, ராமேஸ்வரம் ராமநாதசாமி திருக்கோயிலில் ஆய்வு மேற்கொள்வதற்காக வருகை தந்தார்.

அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர், ராமநாதசாமி சுவாமி மற்றும் பர்வதவர்த்தினி அம்மனை தரிசனம் செய்த அமைச்சர், கோயிலின் மூன்றாம் பிரகாரம், அன்னதானக் கூடம் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது, அமைச்சர் செல்லவிருந்த பகுதிகளில் துர்நாற்றம் ஏற்படாமல் இருக்க கோயில் ஊழியர்கள் முன்கூட்டியே சென்று நறுமண ஸ்பிரே, பினாயில் உள்ளிட்டவற்றை தெளித்து சுத்தம் செய்தனர்.

அமைச்சரின் வருகையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை, கோயிலுக்கு வந்திருந்த பக்தர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசுபொருளாக மாறியது.

அமைச்சரின் ஆய்வை ஒட்டி கோயிலில் தூய்மை மற்றும் பராமரிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டதாக கோயில் வட்டாரங்கள் தெரிவித்தன.

Hindusthan Samachar / GOKILA arumugam