இரண்டு ஆண்டுகளில் ஆட்சியைப் பிடித்து அதிசயம் படைத்தவர் விஜய்- இயக்குநர் ஆர்.வி. உதயகுமார்
சென்னை, 03 ஜூன் (ஹி.ச) சென்னை பனையூரில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திரைப்பட இயக்குநர் ஆர்.வி. உதயகுமார், விஜயின் அரசியல் பயணம் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் வளர்ச்சி குறித்து பாராட்டுத் தெரிவித்தார். அப்ப
Rv


சென்னை, 03 ஜூன் (ஹி.ச)

சென்னை பனையூரில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திரைப்பட இயக்குநர் ஆர்.வி. உதயகுமார்,

விஜயின் அரசியல் பயணம் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் வளர்ச்சி குறித்து பாராட்டுத் தெரிவித்தார்.

அப்போது அவர் கூறுகையில்,

நானும் என்னுடைய நண்பர்களும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

அதிமுகவின் மாநில கலைப்பிரிவு செயலாளராக பணியாற்றி வந்த நான், கடந்த வாரம் அக்கட்சியில் இருந்து விலகினேன் என்றார்.

மேலும், தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றம் வரப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்தேன். பல்வேறு அரசியல் காரணங்களால் விஜயின் முயற்சிகள் முடக்கப்பட்ட போதிலும், அவற்றையெல்லாம் தாண்டி இன்று மக்கள் மனதில் இடம்பிடித்து மிகப்பெரிய அதிசயத்தை நிகழ்த்தியுள்ளார் என்று தெரிவித்தார்.

இது உலகின் எட்டாவது அதிசயம் என்று கூட சொல்லலாம். ஒரு அரசியல் கட்சியைத் தொடங்கி வெறும் இரண்டு ஆண்டுகளிலேயே மக்களின் பேராதரவைப் பெற்று ஆட்சியைப் பிடித்த ஒரே தலைவர் விஜய் தான்.

விசிலை அடையாளமாகக் கொண்டு ஒரு விரல் புரட்சியை உருவாக்கியுள்ளார்.

இது ஒரு தலைமுறை மாற்றத்தின் வெற்றி என்றும் அவர் குறிப்பிட்டார்.

இளைஞர்களால் கட்டமைக்கப்பட்ட இந்த இயக்கத்தின் செயல்பாடுகள் தன்னை மிகவும் கவர்ந்ததாக கூறிய ஆர்.வி. உதயகுமார்,

இளைஞர்களின் ஆற்றலால் வளர்ந்து வரும் இந்தக் கட்சியைப் பார்த்து வியப்பும் ஆர்வமும் ஏற்பட்டது.

அதனால்தான் நாங்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளோம் என்றார்.

Hindusthan Samachar / P YUVARAJ