Enter your Email Address to subscribe to our newsletters

திருவனந்தபுரம், 20 ஜூன் (ஹி.ச.)
திருவனந்தபுரம் மாவட்டம் பட்டம் பகுதியில் உள்ள புனித மேரி
பள்ளி மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலின் போது, அங்கிருந்து வெளியேறுவதற்காக ஒரு மாணவர் அருகில் உள்ள வீட்டின் மதில் சுவரில் பொருத்தப்பட்டிருந்த இரும்புக் கதவைத் தாண்டி குதிக்க முயன்றதாக கூறப்படுகிறது.
அப்போது கதவின் மீது ஏறி குதிக்க முயன்ற நிலையில், கதவில் பொருத்தப்பட்டிருந்த கூர்மையான இரும்புக் கம்பி மாணவரின் பின்புறத்தில் குத்தி சிக்கிக் கொண்டது.
இதனால் கடுமையான வலியால் மாணவர் அலறியதையடுத்து, அப்பகுதி மக்கள் விரைந்து வந்து அவரை மீட்க முயன்றனர்.
எனினும், மாணவர் கம்பியில் சிக்கியிருந்ததால் அவரை மீட்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு மாணவரை பாதுகாப்பாக மீட்டனர்.
பின்னர் காயமடைந்த மாணவர் திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P