தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்- வானிலை மையம் அலர்ட்!
தமிழ்நாடு, 20 ஜூன் (ஹி.ச.) கிழக்கு விதர்பா முதல் தமிழ்நாடு பகுதிகள் வரை தெலங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசம் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டின் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகு
மழை


தமிழ்நாடு, 20 ஜூன் (ஹி.ச.)

கிழக்கு விதர்பா முதல் தமிழ்நாடு பகுதிகள் வரை தெலங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசம் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டின் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஒரு வாரத்திற்கு மிதமான மழை தொடரும் என வானிலை மையம் கணித்துள்ளது.

குறிப்பாக, நீலகிரி, ஈரோடு, சேலம், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் எனவும்,மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், வட தமிழகத்தில் ஒருசில இடங்களில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது.

அதேபோல, திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யக்கூடும் எனக் கணித்துள்ளது.

சென்னையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஓரிரு பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வெயிலை பொறுத்தமட்டில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு வாரத்திற்கு இயல்பை ஒட்டியே இருக்கும் என்றும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P