Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 20 ஜூன் (ஹி.ச.)
கோவையில் தனிஷ்க் ஜூவல்லரி சார்பில் மூன்று நாள் உயர்தர இயற்கை வைர நகைகள் மற்றும் சாலிடையர் ஆபரணங்களுக்கான பிரம்மாண்ட கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
டாடா குழுமத்தின் இந்தியாவின் முன்னணி மற்றும் நம்பகமான நகை விற்பனை நிறுவனமான தனிஷ்க் ஏற்பாடு செய்துள்ள இந்த கண்காட்சி, கோவை ரேஸ்கோர்ஸில் உள்ள வெல்கம் ஹோட்டல் பை ஐடிசியில் நடைபெற்று வருகிறது. கண்காட்சியை தனிஷ்க் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் தொடங்கி வைத்தனர்.
ஜூன் 19 முதல் 21 வரை நடைபெறும் இக்கண்காட்சி, தினமும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை பொதுமக்களுக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
உயர்தர இயற்கை வைர நகைகள், சாலிடையர் ஆபரணங்கள், நவீன மற்றும் பாரம்பரிய வடிவமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு நகைத் தொகுப்புகள் இதில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
குறிப்பாக தென்னிந்திய திருமணங்கள் மற்றும் விழாக்களை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள ‘சவுத் இந்தியன் ஸ்டடெட் கலெக்ஷன்’ தொகுப்பு, பாரம்பரிய அழகையும் நவீன வடிவமைப்பையும் ஒருங்கிணைத்ததாக அமைந்துள்ளது.
மணமகள்கள் மற்றும் குடும்பங்களின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில் இந்த தொகுப்பு வடிவமைக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
கண்காட்சியை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்காக பல்வேறு சிறப்பு சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. வைர நகைகளின் மதிப்பில் 20 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுவதுடன், எந்த நகைக்கடையில் வாங்கப்பட்டிருந்தாலும் 9 காரட் மற்றும் அதற்கு மேற்பட்ட பழைய தங்க நகைகளை 0 சதவீத கழிவு சலுகையுடன் மாற்றிக் கொள்ளும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த கண்காட்சி மூலம் உயர்தர இயற்கை வைர நகைகள் மற்றும் பிரத்யேக வடிவமைப்புகளை ஒரே இடத்தில் பார்வையிட்டு வாங்கும் வாய்ப்பு வாடிக்கையாளர்களுக்கு கிடைத்துள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P