நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றலாம் ஆனால் அதன் சாதனைகளை அழிக்க முடியாது - மு.க. ஸ்டாலின்
சென்னை, 20 ஜூன் (ஹி.ச.) ''நான் முதல்வன்'' திட்டத்தின் சமூக வலைதளப் பக்கங்களின் பெயரை மாற்றலாம், அதில் உள்ள பதிவுகளை நீக்கலாம். ஆனால், அந்தத் திட்டத்தின் மூலம் பயனடைந்த ஆயிரக்கணக்கான இளைஞர்களின் கனவுகளையும் நன்றியுணர்வையும் மக்கள் மனதில் இருந்த
முதலமைச்சர்


சென்னை, 20 ஜூன் (ஹி.ச.)

'நான் முதல்வன்' திட்டத்தின் சமூக வலைதளப் பக்கங்களின் பெயரை மாற்றலாம், அதில் உள்ள பதிவுகளை நீக்கலாம்.

ஆனால், அந்தத் திட்டத்தின் மூலம் பயனடைந்த ஆயிரக்கணக்கான இளைஞர்களின் கனவுகளையும் நன்றியுணர்வையும் மக்கள் மனதில் இருந்து அழிக்க முடியாது என்று முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில்,

நான் முதல்வன் திட்டத்தின் சமூக வலைதளப் பக்கங்களின் பெயரை மாற்றலாம், அதிலிருந்த பதிவுகளை நீக்கலாம்.

ஆனால், ஆயிரக்கணக்கான இளைஞர்களின் கனவை நனவாக்கிய திட்டத்தின் சாதனைகளையும் அதன் மீதான நன்றியுணர்வையும் மக்கள் மனங்களில் இருந்து நீக்க முடியாது. அவை அவர்களின் இதயத்தில் ஆழமாக பதிந்துவிட்டன என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தனது ஆட்சிக் காலத்தில் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் அளித்து, படிங்க, படிங்க, படிங்க என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்ததாகவும், படித்து முன்னேற விரும்பும் இளைஞர்களுக்கு உதவுவதற்காகவே 'நான் முதல்வன்' என்ற கனவுத் திட்டத்தை தொடங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டத்தை முடக்குவது தமிழ்நாட்டு இளைஞர்களின் வளர்ச்சியை முடக்கும் செயலாக அமைந்துவிடும் என்றும் அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / GOKILA arumugam