கத்தியுடன் சுற்றித்திரிந்த வட மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர் கைது
ராணிப்பேட்டை, 20 ஜூன் (ஹி.ச.) ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா அடுத்த தலங்கை ரயில்வே நிலையத்தின் அருகே இரவு அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அனந்த ரியாங் வயது (33) என்பவர் பழைய பாலகிருஷ்ணாபுரம் பகுதியில் விவசாய நிலத்தில் விறகு வெட்டி இருந்த பெண்ணிடம் கத்திய
Arrest


ராணிப்பேட்டை, 20 ஜூன் (ஹி.ச.)

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா அடுத்த தலங்கை ரயில்வே நிலையத்தின் அருகே இரவு அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அனந்த ரியாங் வயது (33) என்பவர் பழைய பாலகிருஷ்ணாபுரம் பகுதியில் விவசாய நிலத்தில் விறகு வெட்டி இருந்த பெண்ணிடம் கத்தியை பிடுங்கி சாலையோரம் செல்லும் பொதுமக்களிடம் கத்தியை காட்டி மிரட்டியுள்ளார்.

இதனை கண்ட பொதுமக்கள் ஒன்று கூடி அனந்த ரியாங் பிடிக்க முயன்ற போது அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

பிறகு இது குறித்து வாலாஜா போலீசாரிடம் புகார் தெரிவித்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வாலாஜா போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் இன்று காலை வாலாஜா பகுதியில் சுற்றித்தி ரிந்த வடமாநில வாலிபரை அனந்த ரியாங்கை பிடித்து அவர் வைத்திருந்த கத்தியை மீட்டனர்.

பிறகு அவர் கைது செய்யப்பட்டு, வாலாஜா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Hindusthan Samachar / ANANDHAN