அரசுப் பள்ளிகளில் அரசியல் பிரச்சாரம் கூடாது - தவெக நிர்வாகிகள் செயலுக்கு வானதி சீனிவாசன் கண்டனம்
சென்னை, 20 ஜூன் (ஹி.ச) காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே உள்ள அரசு பள்ளியில் பயிலும் சிறார்களிடம் முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் புகைப்படத்தைக் காட்டி, தவெக நிர்வாகிகள் அரசியல் நோக்கத்துடன் பேசியதாக வெளியாகியுள்ள காணொளிக்கு கடும் கண்டனம் தெரிவி
Vanathi


Bb


சென்னை, 20 ஜூன் (ஹி.ச)

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே உள்ள அரசு பள்ளியில் பயிலும் சிறார்களிடம் முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் புகைப்படத்தைக் காட்டி, தவெக நிர்வாகிகள் அரசியல் நோக்கத்துடன் பேசியதாக வெளியாகியுள்ள காணொளிக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் வானதி சீனிவாசன்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப் பதிவில்,

சிறுவர், சிறுமிகளை அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது என்றும், தேர்தல் பரப்புரையின்போது சிறார்களிடம் வாக்கு சேகரிக்கும் வகையில் பேசிய அணுகுமுறை தற்போது பள்ளிகளுக்குள்ளும் தொடர்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், தலைவர்களின் வரலாறுகளையும் சாதனைகளையும் மாணவர்களுக்கு எடுத்துரைப்பது ஆசிரியர்களின் பொறுப்பு என்றும், அரசியல் கட்சியினருக்கு அரசு பள்ளிகளில் அரசியல் பிரச்சாரம் மேற்கொள்ள எந்த இடமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

கல்விக்கூடங்கள் அரசியல் தலைவர்களின் புகழைப் பரப்பும் மேடைகள் அல்ல; கல்வியையும் ஒழுக்கத்தையும் போதிக்கும் புனிதமான இடங்கள் என்பதை தவெக நிர்வாகிகள் உணர வேண்டும் எனவும் வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.

அரசுப் பள்ளிகளை அரசியல் விளம்பர தளங்களாக மாற்றும் முயற்சிகள் தவிர்க்கப்பட வேண்டும் என்றும், மாணவர்களின் கல்விச் சூழலை பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ