திருக்கோவிலூர் பேருந்து நிலையத்தில் பெண்ணிடம் செல்போன் பறிப்பு- போலீசார் விசாரணை
கள்ளக்குறிச்சி, 20 ஜூன் (ஹி.ச.) கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பேருந்து நிலையத்தில் இன்று அதிகாலை 5 மணி அளவில், வெளியூர் செல்வதற்காக வந்திருந்த பெண் ஒருவர் பேருந்துக்காக காத்திருந்து தனது செல்போனை பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது இருசக்க
செல்போன் பறிப்பு


கள்ளக்குறிச்சி, 20 ஜூன் (ஹி.ச.)

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பேருந்து நிலையத்தில் இன்று அதிகாலை 5 மணி அளவில், வெளியூர் செல்வதற்காக வந்திருந்த பெண் ஒருவர் பேருந்துக்காக காத்திருந்து தனது செல்போனை பார்த்துக்கொண்டிருந்தார்.

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள் அந்தப் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித் திரிந்துள்ளனர்.

அவர்களில் ஒருவர் நீண்ட நேரமாக அந்த பெண்ணை நோட்டமிட்டுக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

திடீரென பெண்ணின் அருகே வந்த அந்த இளைஞர், அவரது கையில் இருந்த செல்போனை பறித்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றார்.

இதனால் அதிர்ச்சியடைந்த பெண், அவர்களை துரத்திச் செல்ல முயன்றும் பிடிக்க முடியவில்லை.

பின்னர் இதுகுறித்து திருக்கோவிலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், பேருந்து நிலையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, செல்போன் பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதற்கிடையில், சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலை தளங்களில் வைரலாகி, பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிகாலை நேரங்களில் பேருந்து நிலையங்களில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam