விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை சந்திரபாபு நாயுடு - ஒய். எஸ். ஷர்மிளா விமர்சனம்
ஆந்திரா , 21 ஜூன் (ஹி.ச.) ஆந்திரப் பிரதேசத்தில் விவசாய நலத்திட்டங்கள் தொடர்பாக ஆளும் கூட்டணி அரசுக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே அரசியல் விவாதம் தீவிரமடைந்துள்ளது. முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு “அன்னதாதா சுகீபவ” திட்டத்தை முழுமையாக
A


ஆந்திரா , 21 ஜூன் (ஹி.ச.)

ஆந்திரப் பிரதேசத்தில் விவசாய நலத்திட்டங்கள் தொடர்பாக ஆளும் கூட்டணி அரசுக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே அரசியல் விவாதம் தீவிரமடைந்துள்ளது.

முதல்வர் சந்திரபாபு நாயுடு

தலைமையிலான அரசு “அன்னதாதா சுகீபவ” திட்டத்தை முழுமையாக செயல்படுத்தாமல், குறைந்த அளவு நிதி மட்டுமே வழங்கி விவசாயிகளை ஏமாற்றுவதாக ஆந்திர காங்கிரஸ் தலைவர் ஒய். எஸ்.ஷர்மிளா கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது குறித்து,அவர் வெளியிட்ட அறிக்கையில்,

தேர்தல் முன்பு அறிவிக்கப்பட்ட பயிர் முதலீட்டு உதவி, குறைந்தபட்ச ஆதரவு விலை, பயிர் காப்பீடு உள்ளிட்ட முக்கிய வாக்குறுதிகள் இதுவரை முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என்றும், இதனால் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதற்கு முதல்வர் பொதுமக்கள் முன் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதற்கிடையில், கடந்த ஜூன் 20ஆம் தேதி “அன்னதாதா சுகீபவ” திட்டத்தின் முதல் தவணை நிதி விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டது.

பிஎம்-கிசான் திட்டத்துடன் இணைத்து சுமார் 46.86 லட்சம் விவசாயக் குடும்பங்கள் பயனடைந்ததாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் மாநில அரசு ரூ.5,000 மற்றும் மத்திய அரசு ரூ.2,000 என மொத்தம் ரூ.7,000 வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், சுமார் 60 லட்சம் விவசாயிகள் தகுதியுடையவர்கள் இருந்தும் அனைவருக்கும் நிதி கிடைக்கவில்லை என ஒய்.எஸ். ஷர்மிளா குற்றம் சாட்டியுள்ளார்.

இதனால், விவசாய நலத்திட்ட அமலாக்கம் குறித்த சர்ச்சை மேலும் தீவிரமடைந்துள்ளது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA