Enter your Email Address to subscribe to our newsletters

இராஜபாளையம், 21 ஜூன் (ஹி.ச.)
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள இளந்திரை கொண்டான் பகுதியைச் சேர்ந்த சாந்தகுமாரி என்ற பெண்ணை பெண் பார்த்து நிச்சயதார்த்தம் செய்து 22. ம் தேதி திருமணத்திற்காக பெண் அழைத்து செல்வதற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அடுத்துள்ள குன்னூர் பகுதியைச் சேர்ந்த நித்திஷ் என்ற மணமகன் வீட்டார் இரண்டு வேன்களில் வந்துள்ளனர்.
நிச்சயதார்த்த நிகழ்ச்சிகள் முடிந்து பெண் அழைத்துக் கொண்டு செல்வதற்காக பெண் வீட்டார் தரப்பிலிருந்து தனியார்க்கு சொந்தமான சுற்றுலா பேருந்து வாடகைக்கு எடுத்துள்ளனர்.
இந்த பேருந்தை பேரையூர் அருகே உள்ள சாப்டூர் கிராமத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவர் பேருந்தை ஓட்டி உள்ளார்.
இளந்திரை கொண்டாடியிலிருந்து முதுகுடி வழியாக நான்கு வழிச்சாலை மூலம் குன்னூர் செல்ல திட்டமிட்டு பேருந்து இயக்கிய பொழுது கூணங்களும் கண்மாய் அருகே பேருந்து குறுகலான சாலையில் சென்ற பொழுது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கண்மாயில் கவிழ்ந்ததில் சம்பவ இடத்திலேயே குன்னூரை சேர்ந்த அசோகன் மகன் செல்வம் வயதாக 55 கருப்பையா மனைவி மாடத்தி வயது 50 ஆக இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் பேருந்தில் பயணம் செய்த 30 ஆண்கள் 28 பெண்கள் மற்றும் சிறுவர்கள் என மொத்தம் 58 பேர் படுகாயம் அடைந்து இராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வந்த சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்திரா தென் மண்டல ஐஜி விஜேந்திர பிதாரி டி ஐ ஜி அபினவ் குமார் விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கெளதம் கோயல் ஆகியோர் மருத்துவமனையில் ஆய்வு செய்து காயம் அடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினர்.
மேலும் சிகிச்சைக்கான அனைத்து உதவிகளையும் விரைவாக செய்ய வேண்டுமென மருத்துவர்களுக்கு அறிவுரை வழங்கினர்
Hindusthan Samachar / Durai.J