சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இருந்து ஐந்து மாணவர்கள் தப்பியோட்டம்
செங்கல்பட்டு, 21 ஜூன் (ஹி.ச.) செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் தண்டனை பெறும் சிறுவர்கள் பயின்று வருகின்றனர். இங்கு சென்னை திருச்சி சேலம் மதுரை என பல்வேறு பகுதிகளில் இருந்து திருட்டு, வழிப்பறி உள்ளட பலதரப்பட்ட வழக்குகளில் தொடர்புடைய 18வயத
Special Home


செங்கல்பட்டு, 21 ஜூன் (ஹி.ச.)

செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் தண்டனை பெறும் சிறுவர்கள் பயின்று வருகின்றனர். இங்கு சென்னை திருச்சி சேலம் மதுரை என பல்வேறு பகுதிகளில் இருந்து திருட்டு, வழிப்பறி உள்ளட பலதரப்பட்ட வழக்குகளில் தொடர்புடைய 18வயதுக்கு உட்பட்ட சிறுவர்களை நல்வழிப்படுத்தும்

நோக்கில் செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் பேக்கரிதொழில், கார்ப்பெண்டர் தொழில் என இங்குள்ள சிறுவர்களுக்கு

பல்வேறு தொழில்கள் பயிற்றுவிக்கப்படுகிறது.

சுமார் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். தினமும் அதிகாலை சிறுவர்களுக்கு டீ வழங்குவதற்கு பள்ளி வளாக மைதானத்திற்கு அழைத்து வருவது வழக்கம்.

இந்நிலையில் இன்று அதிகாலை டீ குடிக்க அழைத்து வந்த போது சாமூர்த்தி, ஸ்ரீநித்தின், சஞ்சய், வினித் மற்றும் பிரின்ஸ் ராஜா உள்ளிட்ட ஐந்து சிறுவர்கள் சீர்திருத்த பள்ளியில் இருந்து தப்பியோடியுள்ளனர்.

இது குறித்து தகவலறிந்து வந்த நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இங்கு பணியாற்றும் ஊழியர்கள் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர்.

ஆனால் யாரும் முறையாக பணிக்கு வருவதில்லை.

அதேபோல காவலாளி முன்பக்க கதவை பூட்டி சாவியை அருகில் உள்ள காவலாளி அறையில் வைத்திருப்பதை முன்கூட்டியே தெரிந்து கொண்ட சிறுவர்கள் ஐந்து பேரும் திட்டமிட்டு இன்று அதிகாலை டீக்குடிக்க அழைத்துவந்த அதிகாரிகளை ஏமாற்றி பாதுகாவலரின் அறையிலிருந்த சாவியை எடுத்து முன்பக்க கதவை திறந்து கொண்டு தப்பியோடியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த பள்ளியில் இருந்து அடிக்கடி இதுபோன்று சிறுவர்கள் தப்பியோடுவது வழக்கமாகி விட்டது.

Hindusthan Samachar / ANANDHAN