முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தந்தையர் தின வாழ்த்து
சென்னை, 21 ஜூன் (ஹி.ச.) சர்வதேச தந்தையர் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. தந்தைகளின் தியாகங்கள், குடும்பத்திற்காக அவர்கள் ஆற்றும் பங்களிப்பு மற்றும் சமூகத்தில் அவர்கள் செலுத்தும் தாக்கத்தை போற
Father's Day wishes from former Minister Thangam Thennarasu.


சென்னை, 21 ஜூன் (ஹி.ச.)

சர்வதேச தந்தையர் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது.

தந்தைகளின் தியாகங்கள், குடும்பத்திற்காக அவர்கள் ஆற்றும் பங்களிப்பு மற்றும் சமூகத்தில் அவர்கள் செலுத்தும் தாக்கத்தை போற்றும் வகையில் இந்நாள் உலகளவில் கடைப்பிடிக்கப்படுகிறது

அந்த வகையில் இன்று

(ஜூன் 21) சர்வதேச தந்தையர் தினத்தை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

எக்ஸ் தளத்தில் அவர் இன்று விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது,

வார்த்தைகளில் விவரிக்க முடியாத பேரன்பின் இருப்பிடம்... அப்பா!

விரல் பிடித்து நடக்கக் கற்றுக்கொடுப்பது முதல், பிள்ளைகளின் மகிழ்ச்சிக்காகவும் அவர்களின் ஒவ்வொரு வெற்றியின் பின்னாலும் இறுதிவரை தூணாய் நிற்கும் தியாக உள்ளம்தான் அப்பா.

அன்பின் இலக்கணமாய், அறிவின் இருப்பிடமாய், நம் வாழ்வின் வழிகாட்டியாய் இருக்கும் உலகிலுள்ள அனைத்து தந்தையருக்கும் நெஞ்சம் நிறைந்த தந்தையர் தின வாழ்த்துகள்!

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சர்வதேச தந்தையர் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள அவரது இந்த வாழ்த்துச் செய்தி சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது.

Hindusthan Samachar / vidya.b