Enter your Email Address to subscribe to our newsletters

ஷில்லாங், 21 ஜூன் (ஹி.ச)
மேகாலயா மாநிலத்தில் 12-வது சர்வதேச யோகா தின கொண்டாட்டங்களில் இன்று பங்கேற்ற பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பேணுவதற்கு முறையான யோகா பயிற்சி அவசியம் என வலியுறுத்தினார்.
ஷில்லாங் நகரில் நடைபெற்ற இந்த யோகா அமர்வில், விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ஏ.பி. சிங்கும் கலந்து கொண்டார்.
இது தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் யோகா தின வாழ்த்துகளை தெரிவித்த ராஜ்நாத் சிங் கூறுகையில்,
நாம் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஆரோக்கியமாக இருக்க விரும்பினால், தவறாமல் யோகா செய்வது அவசியம்.
இன்று யோகா சர்வதேச அளவில் கடைப்பிடிக்கப்படுகிறது. இதற்கு யாருக்காவது பெருமை சேர வேண்டுமென்றால், அது நமது பிரதமர் நரேந்திர மோடிக்குதான். ஐக்கிய நாடுகள் சபையில் இதற்கான தீர்மானத்தை அவர்தான் நிறைவேற்றினார். அனைவரும் அதை உடனடியாக ஏற்றுக்கொண்டனர்.
சர்வதேச யோகா தினத்தை நிறுவும் தீர்மானம் இந்தியாவால் முன்மொழியப்பட்டு, ஐ.நா.வின் 175 உறுப்பு நாடுகளால் ஆதரிக்கப்பட்டது. இந்த முன்முயற்சியை, ஐ.நா. பொதுச்சபையின் 69-வது கூட்டத்தொடரின் தொடக்கத்தில் பிரதமர் மோடி முதன்முதலில் முன்வைத்தார்.
இந்த ஆண்டுக்கான கருப்பொருள் “ஆரோக்கியமான முதுமைக்கு யோகா” என்பதாகும். வாழ்வின் பல்வேறு கட்டங்களிலும் மக்கள் சுறுசுறுப்பாகவும், சுதந்திரமாகவும், சமூகத்துடன் இணைந்திருக்கவும் யோகா வகிக்கும் பங்கை இது மையப்படுத்துகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b