பிரதமர் மோடியின் தலைமையே யோகாவை உலகமயமாக்கியது - ஜே.பி. நட்டா பெருமிதம்
புதுடெல்லி, 21 ஜூன் (ஹி.ச.) 12வது சர்வதேச யோகா தினம், ‘ஆரோக்கியமான முதுமைக்கான யோகா’ என்ற கருப்பொருளில் இன்று இந்தியா முழுவதும் மற்றும் உலகளவில் அனுசரிக்கப்பட்டது. வாழ்வின் அனைத்து நிலைகளிலும் ஆரோக்கியமான, சுறுசுறுப்பான வாழ்க்கையை ஊக்குவிப்பத
பிரதமர் மோடியின் தலைமையே யோகாவை உலகமயமாக்கியது - ஜே.பி. நட்டா பெருமிதம்


புதுடெல்லி, 21 ஜூன் (ஹி.ச.)

12வது சர்வதேச யோகா தினம், ‘ஆரோக்கியமான முதுமைக்கான யோகா’ என்ற கருப்பொருளில் இன்று இந்தியா முழுவதும் மற்றும் உலகளவில் அனுசரிக்கப்பட்டது.

வாழ்வின் அனைத்து நிலைகளிலும் ஆரோக்கியமான, சுறுசுறுப்பான வாழ்க்கையை ஊக்குவிப்பதில் யோகாவின் பங்கை இந்த கருப்பொருள் வலியுறுத்துகிறது.

இந்த அங்கீகாரம் உலகளாவிய நல்வாழ்வுக்கான இந்தியாவின் பங்களிப்பை அடையாளப்படுத்தியதோடு, யோகாவை கண்டங்கள் கடந்த உலகளாவிய கொண்டாட்டமாக மாற்றியுள்ளது.

அந்த வகையில் 12வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, இன்று புதுடெல்லியில் நடைபெற்ற மக்கள் யோகா நிகழ்ச்சியில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சரும், பாரதிய ஜனதா கட்சித் தலைவருமான ஜே.பி. நட்டா கலந்துகொண்டார்.

யோகாவுக்கு கிடைத்துள்ள உலகளாவிய அங்கீகாரத்திற்கு பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு தலைமையே காரணம் என அவர் பாராட்டு தெரிவித்தார்.

கூட்டத்தில் உரையாற்றிய நட்டா பேசியதாவது,

யோகா அன்றாட வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும். மனிதகுல மேம்பாட்டிற்காக யோகாவை உலகம் முழுவதும் பின்பற்ற வேண்டும்.

பிரதமர் யோகாவை உலக அளவிற்கு கொண்டு சென்று மனிதகுலத்திற்கு மிகப்பெரிய சேவை செய்துள்ளார். மனிதகுலத்திற்கு புதிய திசையை வழங்குவதில் பெரும் பங்களிப்பு செய்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபை ஜூன் 21-ஐ யோகா தினமாக அறிவித்தது, யோகாவை சர்வதேச அளவில் அங்கீகரித்து சாமானிய மக்களின் வாழ்வில் கொண்டு செல்ல முடியும் என்பதற்கு சான்று.

இது ஒரு நாட்டின் முறையாக மட்டும் இருக்காமல், உலகின் முறையாக மாறி மனிதகுலத்திற்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும். இதை மனதில் கொண்டே யோகா தினத்தை கொண்டாடுகிறோம். நீங்கள் அனைவரும் யோகாவை உங்கள் வாழ்வில் இணைத்து, யோகாவுடன் வாழ்வில் முன்னேற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Hindusthan Samachar / vidya.b