விற்பனைக்காக கஞ்சாவை காரில் கடத்தி வந்த 5 இளைஞர்கள் கைது - போலீசார் விசாரணை
கள்ளக்குறிச்சி, 21 ஜூன் (ஹி.ச.) கள்ளக்குறிச்சி மாவட்டம் நீலமங்கலம் பகுதியில் கஞ்சா கடத்திய வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் கள்ளக்குறிச்சி காவல் ஆய்வாளர் செல்வநாயகம் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈ
Arrest


கள்ளக்குறிச்சி, 21 ஜூன் (ஹி.ச.)

கள்ளக்குறிச்சி மாவட்டம் நீலமங்கலம் பகுதியில் கஞ்சா கடத்திய வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவலின் பேரில் கள்ளக்குறிச்சி காவல் ஆய்வாளர் செல்வநாயகம் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது அவ்வழியாக வந்த சுசுகி இருத்திகா என்ற வாகனத்தை நிறுத்தி விசாரணை செய்தபோது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்த நிலையில் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் வாகனத்தை முழுவதும் சோதனை செய்தனர்.

அப்போது வாகனத்தில் சுமார் ஒரு கிலோ கஞ்சா பொட்டலம் இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனை தொடர்ந்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்த போது கள்ளக்குறிச்சி நகரை சேர்ந்த யாசின், வினோத் குமார், முகமது கவுஸ் கா.மாமனந்தல் கிராமத்தைச் சேர்ந்த முகமது அத்திப், வெற்றிவேல் என்பது தெரிய வந்தது.

இதனை அடுத்து ஐந்து பேரையும் காவல்துறையினர் கைது செய்து அவர்கள் விற்பனைக்காக கடத்தி வந்த ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / ANANDHAN