ஜூன் 26 ஆம் தேதி மதிமுக உயர்நிலைக் குழு கூட்டம் - வைகோ அறிவிப்பு
சென்னை, 21 ஜூன் (ஹி.ச) மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலைக் குழு கூட்டம் வரும் ஜூன் 26 ஆம் தேதி நடைபெற உள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகமான தாயகத்தி
MDMK High-Level Committee meeting on June 26


சென்னை, 21 ஜூன் (ஹி.ச)

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலைக் குழு கூட்டம் வரும் ஜூன் 26 ஆம் தேதி நடைபெற உள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

சென்னை எழும்பூரில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகமான தாயகத்தில் இந்தக் கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் அறிவித்துள்ளது.

மதிமுக அவைத் தலைவர் அர்ஜுனா ராஜ் தலைமையில் நடைபெறும் இந்த உயர்நிலைக் குழு கூட்டத்தில், கட்சியின் முக்கிய நிர்வாகிகள், உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொள்ள உள்ளனர்.

தற்போதைய அரசியல் சூழ்நிலை, கட்சியின் வருங்கால செயல் திட்டங்கள் மற்றும் முக்கிய கொள்கை முடிவுகள் குறித்து இந்தக் கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் கட்சியின் அடுத்தகட்ட நகர்வுகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.

Hindusthan Samachar / vidya.b