Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 21 ஜூன் (ஹி.ச.)
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அடுத்துள்ள திருநகர் பகுதியில் அமைச்சரும் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினருமான சி டி ஆர் நிர்மல் குமாரின் புதிய சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு விழா இன்று நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக மதுரை எம்.பி சு வெங்கடேசன், விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் ஆகியோர் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி அலுவலகத்தை திறந்து வைத்தனர்.
தொடர்ந்து எம்பி மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில்,
தமிழக அமைச்சர் அவையில் காங்கிரசுக்கு இடம் கிடைத்திருப்பது மகிழ்ச்சியானது. மதுரையில் பொறுப்பு அமைச்சராக இருப்பதால் அவருக்கு மிகப்பெரிய பொறுப்பு உள்ளது.
மாநகராட்சியின் வளர்ச்சி என்பது பல வகையில் தடைபட்டிருந்தாலும் இனிவரும் காலங்களில் மதுரை உண்மையிலேயே மாநகரமாக வருகின்ற வாய்ப்பு அதிகமாக உள்ளது.
பொம்மை சொல்லி இருப்பது சிரிப்புக்குரிய விஷயம். பாஜக சட்டமன்ற உறுப்பினரும் அந்த தீர்மானத்தின் போது உள்ளே இருந்தார் அப்படி என்றால் அவர் மீது நடவடிக்கை எடுப்பார்களா. மேகதாது விஷயத்தில் ஒரு செங்கலை கூட கூட எடுத்து வைக்க விட மாட்டோம்.
தவெக காங்கிரஸ் உறவு நீண்ட நாள் உறவு இந்த உறவு ஒரு மூச்சுவல் ரெஸ்பெக்ட் பாஜக காரர்களின் ஆசையை நிறைவேற்றும் நிலைக்கு காங்கிரஸ் வரவில்லை.
எம்பிக்கள் இருக்கும் கட்சியில் இந்தியா கூட்டணியில் இருக்கும் தமிழக வெற்றி கழகத்திற்கு எப்போது எம்பிகள் வருகிறார்களோ அப்போது பேசுவோம் என்றார்.
Hindusthan Samachar / ANANDHAN