Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 21 ஜூன் (ஹி.ச.)
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அடுத்துள்ள திருநகர் பகுதியில் அமைச்சரும் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினருமான சி டி ஆர் நிர்மல் குமாரின் புதிய சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு விழா இன்று நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக மதுரை எம்.பி சு வெங்கடேசன், விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் ஆகியோர் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி அலுவலகத்தை திறந்து வைத்தனர்.
இதில் எம்.பி சு.வெங்கடேசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில்,
ஒரு முன்மாதிரியான சட்டப்பேரவை அலுவலக இந்த அலுவலகம் இருந்து செயல்பட வேண்டும். மதுரை மாவட்டத்திற்கு மதுரை மாவட்டத்திற்கு பல வளர்ச்சி திட்டங்களை கேட்டு கொண்டு வர வேண்டியது அமைச்சருக்கு பங்கு உண்டு. அவரது முயற்சிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் என்கிற முறையில் நாங்கள் உறுதுணையாக இருப்போம்.
நீட் வேண்டாம் என்பதற்கு அதன் குளறுபடிகளை அம்பலப்படுத்திக் கொண்டும் போராடிக் கொண்டும் இருக்கின்றோம்,அதேபோல மாநில அரசின் நிலைப்பாடும் நீட் என்பது தேவையில்லை என்பது தான்.
மாநில உரிமை பாதிக்கப்படுகிறது. மாணவர்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுகிறார்கள். இதில் காவல்துறை ஜனநாயக ரீதியாக நடந்து கொள்ள வேண்டும்.
தேசிய கீதம் இரண்டு முறை பாடுவது மரபு மீறுவது கிடையாது 20 முறை கூட பாடலாம். நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவர் உரைக்கு முன்பும் பின்பும் தேசிய கீதம் பாடப்படும்.
வந்தே மாதரம் பாட வேண்டும் என உள்துறை அமைச்சகம் சுற்றறிக்கை விட்டிருந்தது தான் பிரச்சனை. வந்தே மாதிரத்தில் குறிப்பிட்ட கடவுளை வைத்து நான்கு பேராக்கள் இருக்கும் அது பாடக்கூடாது என அரசியல் நிர்ணய சபையில் முடிவெடுக்கப்பட்டது. அது தனிமனித உரிமைக்கு எதிரானது.
அடுத்தவர் உதடு என்ன பாட வேண்டும் என மோடியும் அமித்ஷாவும் முடிவு செய்ய முடியாது. தேசிய கீதத்திற்கு யாரும் எதிரானவர்கள் கிடையாது.
குற்றம் சொல்ல வேண்டும் என்று சொல்கிறார்கள் அதில் குற்றம் இருப்பதாக நான் நினைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / ANANDHAN