Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 21 ஜூன் (ஹி.ச.)
மேகதாது அணைத் திட்டத்திற்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு அளித்துள்ளதாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முன்வைத்த திருத்தம் என்ன என்பதை சட்டமன்ற உறுப்பினர்களுக்கு விளக்காமல், அதனை ஏற்றுக்கொண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அறிவித்தது சட்டமன்ற விதிமுறைகளுக்கு புறம்பானது என குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், திருத்தத்தின் விவரங்கள் அவையில் தெளிவுபடுத்தப்படாத நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் கொண்டு வந்த அந்தத் திருத்தத்திற்கு ஆதரவு அளிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, திங்கட்கிழமை சட்டமன்றம் கூடும் போது, விளக்கமின்றி ஏற்றுக்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் அந்தத் திருத்தத்தை திரும்பப் பெறும் வகையில் அவையில் தனித் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P