Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 21 ஜூன் (ஹி.ச.)
வினாத்தாள் முறைகேடு காரணமாக ரத்து செய்யப்பட்ட இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வுக்கான மறுதேர்வு நாடு முழுவதும் இன்று பிற்பகல் நடைபெற உள்ளது.
சென்னையில் மட்டும் 43 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. இங்கு சுமார் 21 ஆயிரம் பேர் எழுத இருப்பதாக சொல்லப்படுகிறது. எந்த முறைகேடுக்கும் இடம் இல்லாமல், தேர்வை சரியாக நடத்தி முடிக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், தலைமைச்செயலாளர் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.
கடந்த முறை தேர்வு ரத்து செய்யப்பட்டதால் இந்த மறுதேர்வுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுகின்றன. வினாத்தாள் தயாரிப்பு பணியில் இருந்த ஒருவர்கூட இன்னும் வெளியே விடப்படவில்லை. ரகசியமாக வைக்கப்பட்டு உள்ளனர். தேர்வை மிகவும் நியாயமான முறையில் நடத்தி முடித்திட தேசிய தேர்வு முகமை விழிப்புடன் பணியாற்றி வருகிறது.
இந்த நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் அருண் ராஜ்,
நீட் மறுதேர்வு எழுதும் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளையும் நம்பிக்கையூட்டும் செய்தியையும் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.
எக்ஸ் தளத்தில் இன்று அவர் கூறியிருப்பதாவது,
நீட் தேர்வை எழுதும் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்!
அமைதியுடன், நம்பிக்கையுடன் தேர்வை எழுதுங்கள். உங்கள் கடின உழைப்பும் விடாமுயற்சியும் நிச்சயம் உங்களுக்கு வெற்றியைத் தரும்.
வாழ்த்துக்கள்..
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b