Enter your Email Address to subscribe to our newsletters

தர்மபுரி, 21 ஜூன் (ஹி.ச.)
தர்மபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளி அருகே ஏழுகுண்டூர் பகுதியை சேர்ந்த விவசாயி முனுசாமி (70) இவரது மனைவி சாலம்மாள் இவர்களுக்கு 4 மகன்கள் உள்ளனர்.
காலையில் சாலம்மாள் வீட்டு வாசலில் கோலம் போட்டு கொண்டிருந்தார்.
அவரது கணவர் முனுசாமி நடை பயிற்சி செல்வதற்காக வீட்டில் இருந்து வெளியே வந்தார், அப்போது பஞ்சப்பள்ளியில் இருந்து மாரண்டஅள்ளி நோக்கி வந்த சொகுசு கார் இருவர் மீதும் மோதியது இதில் சொகுசு காரின் அடியில் சிக்கி உடல் நசுங்கி முனுசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சாலம்மாள் பலத்த காயமடைந்தார்.
அக்கம்பக்கத்தினர் சாலம்மாளை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
தகவலறிந்து வந்த பஞ்சப்பள்ளி போலீசார் முனுசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் விபத்து ஏற்பட்ட சி.சி.டி.வி காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது
Hindusthan Samachar / GOKILA arumugam