Enter your Email Address to subscribe to our newsletters

புதுச்சேரி, 21 ஜூன் (ஹி.ச.)
இந்தியா முழுவதும் இன்று நீட் தேர்வு நடைபெற்றது.
புதுச்சேரி, காரைக்காலில் 4,990 பேர் நீட் மறுதேர்வு எழுதினர்.
பல்வேறு சோதனைகளுக்கு பின்பு மாணவ மாணவிகள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.
புதுச்சேரியில் 9 மையங்களில் 4,324 பேரும், காரைக்காலில் 3 மையங்களில் 666 பேர் தேர்வு எழுதுகின்றனர்.
தேர்வு எழுத வரும் மாணவர்களை மெட்டல் டிடெக்டர், பயோமெட்ரிக் பதிவு உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.
மொபைல், புளூடூத், வாட்ச் போன்ற மின்னணு சாதனங்கள் தடை செய்யப்பட்டுள்ளது.
தேர்வு மையங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
தேர்வர்களுக்காக பிஆர்டிசி சிறப்பு இலவச பேருந்துகளும் இயக்கப்படுகிறது.
மேலும், தேர்வு முடியும் வரை பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் காத்திருக்க சிறப்பு காத்திருப்பு மையங்களும் அமைக்கப்பட்டு உள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN