பெங்களூரு–மும்பை இடையிலான படுக்கை வசதி கொண்ட ‘வந்தே பாரத்’ ரெயில் - வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல்
பெங்களூரு , 21 ஜூன் (ஹி.ச.) பெங்களூரு – மும்பை இடையே இயக்கப்பட உள்ள படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பா.ஜனதா தனது அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் வெளியிட்டதாக தகவல
A


பெங்களூரு , 21 ஜூன் (ஹி.ச.)

பெங்களூரு – மும்பை இடையே இயக்கப்பட உள்ள படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை பா.ஜனதா தனது அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் வெளியிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதில் புதிய படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரெயிலின் முதல் வகுப்பு ஏ.சி. பெட்டியின் உள்துறை வடிவமைப்பு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்களில் பரவி வரும் அந்த காட்சிகளில், ரெயில் பெட்டிகள் உயர்தர ஹோட்டல் போல் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், பயணிகளுக்கு சொகுசான பயண அனுபவம் வழங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

வழக்கமான சேர் கார் வந்தே பாரத் ரெயில்களுக்கு மாறாக, இந்த புதிய படுக்கை வசதி ரெயில் நீண்ட தூர இரவு பயணத்துக்காக உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த ரெயில் சேவை ஆகஸ்ட் மாதம் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வரும் நிலையில், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை எனவும் குறிப்பிடப்படுகிறது.

புதிய ரெயில் குறித்து வெளியான வீடியோ தற்போது இணையத்தில் பெரும் வரவேற்பை பெற்று, பயணிகள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA