வார விடுமுறையால் ராமேஸ்வரத்தில் பக்தர்கள் குவியல் - அக்னி தீர்த்தத்தில் புனித நீராடி சுவாமி தரிசனம்
ராமேஸ்வரம், 21 ஜூன் (ஹி.ச.) ராமேஸ்வரம் திருத்தலத்திற்கு நாள்தோறும் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். இந்த நிலையில், வார விடுமுறையை பயன்படுத்தி இன்று அதிகாலை முதலே ஏராளமான
ராமேஸ்வரம்


ராமேஸ்வரம், 21 ஜூன் (ஹி.ச.)

ராமேஸ்வரம் திருத்தலத்திற்கு நாள்தோறும் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். இந்த நிலையில், வார விடுமுறையை பயன்படுத்தி இன்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் ராமேஸ்வரத்திற்கு வந்திருந்தனர்.

அவர்கள் முதலில் அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடி, தங்களது முன்னோர்களுக்கு எள்ளு பிண்டம் வைத்து திதி மற்றும் தர்ப்பண சடங்குகளை மேற்கொண்டனர்.

தொடர்ந்து ராமநாதசுவாமி கோயிலுக்குள் உள்ள 22 புண்ணிய தீர்த்தங்களில் நீராடி, ராமநாதசாமி மற்றும் பர்வதவர்த்தினி அம்பாளை நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

பக்தர்கள் வருகை அதிகரித்ததையடுத்து கோயில் வளாகம் மற்றும் நான்கு ரத வீதிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்டு உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

வார விடுமுறையால் ராமேஸ்வரத்தில் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ள நிலையில், அக்னி தீர்த்த கடற்கரை மற்றும் கோயில் பகுதிகளில் ஆன்மிக சூழல் நிலவி வருகிறது.

Hindusthan Samachar / GOKILA arumugam