சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் - சி.வி. சண்முகம் திறந்து வைத்தார்
கள்ளக்குறிச்சி, 21 ஜூன் (ஹி.ச.) அதிமுகவில் அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவரான கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள சங்கராபுரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ராகேஷ், தற்பொழுது சி.வி. சண்முகத்தின் ஆதரவாளராக உள்ளார். இந்நிலையில் அவரது சட்டமன்ற உறுப்ப
MLA office


கள்ளக்குறிச்சி, 21 ஜூன் (ஹி.ச.)

அதிமுகவில் அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவரான கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள சங்கராபுரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ராகேஷ், தற்பொழுது சி.வி. சண்முகத்தின் ஆதரவாளராக உள்ளார்.

இந்நிலையில் அவரது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைப்பதற்காக சி.வி. சண்முகம் சங்கராபுரம் வருகை தந்தார்.

விழுப்புரம் மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமி அதிமுகவிற்கு பசுபதியை மாவட்ட செயலாளராக நியமித்துள்ள நிலையில்,

அங்கு சி.வி.சண்முகத்திற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான அதிமுக நிர்வாகிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இதனால் கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுகவில் பெரும் சலசலப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த நிகழ்ச்சியை அதிமுக மாவட்ட செயலாளர் குமரகுரு புறக்கணித்தார்.

Hindusthan Samachar / ANANDHAN