பழம்பெரும் பாடகி எல்.ஆர். ஈஸ்வரியுடன் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் சந்திப்பு
சென்னை, 21 ஜூன் (ஹி.ச.) சென்னையில் தமிழ் திரையுலகின் புகழ்பெற்ற பின்னணிப் பாடகி எல்.ஆர். ஈஸ்வரியை சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் நேரில் சந்தித்து உரையாடினார். இந்த சந்திப்பு குறித்து இன்று தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட
Speaker J.C.D. Prabhakar meets veteran singer L.R. Eswari.


Speaker J.C.D. Prabhakar meets veteran singer L.R. Eswari.


சென்னை, 21 ஜூன் (ஹி.ச.)

சென்னையில் தமிழ் திரையுலகின் புகழ்பெற்ற பின்னணிப் பாடகி எல்.ஆர். ஈஸ்வரியை சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் நேரில் சந்தித்து உரையாடினார்.

இந்த சந்திப்பு குறித்து இன்று தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள சபாநாயகர்,

எல்.ஆர். ஈஸ்வரியை இசை உலகின் தனித்துவமான குரலுக்கு சொந்தக்காரர் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

சந்திப்பின் போது பாடகி எல்.ஆர். ஈஸ்வரி பாடிய பாடல், அந்த நிகழ்வை மேலும் மனதுக்கு நெருக்கமானதாகவும் சிறப்புமிக்கதாகவும் மாற்றியதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் எல்.ஆர். ஈஸ்வரி. குறிப்பாக அவரது குரலில் வெளிவந்த குத்துப் பாடல்கள் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன.

இத்தகைய சிறப்புமிக்க கலைஞரை சந்தித்ததில் பெருமகிழ்ச்சி அடைவதாகவும், அவரது இசைப் பங்களிப்பு தமிழ் திரையுலகிற்கு கிடைத்த பொக்கிஷம் என்றும் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b