ஜான்சியில் சிறப்பு யோகா தின நிகழ்ச்சி - உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்பு
ஜான்சி, 21 ஜூன் (ஹி.ச.) உடல், மன மற்றும் ஆன்மீக நன்மைகளை ஊக்குவிக்கவும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிக்கவும் ஜூன் 21-ம் தேதி உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் 12-வது சர்வதேச யோகா தின விழாவையொட
Special Yoga Day event in Jhansi


ஜான்சி, 21 ஜூன் (ஹி.ச.)

உடல், மன மற்றும் ஆன்மீக நன்மைகளை ஊக்குவிக்கவும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிக்கவும் ஜூன் 21-ம் தேதி உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.

அந்த வகையில் 12-வது சர்வதேச யோகா தின விழாவையொட்டி இன்று ஜான்சி கோட்டை மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் யோகாசனம் செய்தார்.

நிகழ்ச்சியில் பங்கேற்றதற்காக மேடையில் அவருக்கு மரக்கன்று வழங்கி கௌரவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் உரையாற்றிய யோகி ஆதித்யநாத் கூறியதாவது,

இந்தியாவின் பாரம்பரியத்துக்கும் பண்பாட்டுக்கும் உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்ததற்கும், நமக்கெல்லாம் ஒரு தொலைநோக்குப் பார்வையை வழங்கியதற்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கு நாம் அனைவரும் நன்றிக்கடன்பட்டுள்ளோம்.

அவரது தொலைநோக்குப் பார்வையால் 140 கோடி இந்தியர்களும் உலக அரங்கில் பெருமையுடன் முன்னேறிச் செல்லவும், 'விக்சித் பாரத்' கனவை நனவாக்கவும் முடிகிறது.

ஒவ்வொரு ஆண்டும் பிரதமரே வெவ்வேறு மாநிலங்களுக்குச் சென்று சர்வதேச யோகா தின நிகழ்ச்சிகளை புதிய வெற்றியின் உச்சத்துக்குக் கொண்டு செல்வதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

இந்த ஆண்டு ஜான்சியில் உள்ள இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மைதானத்தில் நடைபெறும் சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் உங்கள் அனைவருடனும் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது எனது பாக்கியம்

என்று அவர் தெரிவித்தார்.

Hindusthan Samachar / vidya.b