திருப்பரங்குன்றத்தில் இன்று மாலை முதல் ஆனி ஊஞ்சல் திருவிழா- 29ஆம் தேதி முக்கனி பூஜை
திருப்பரங்குன்றம், 21 ஜூன் (ஹி.ச.) திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் இன்று மாலை ஆனி ஊஞ்சல் திருவிழா 10 நாட்கள் நடைபெறும். இவ்விழாவை முன்னிட்டு உற்சவர் சன்னதியில் உள்ள உற்சவர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி தெய்வயானை அம்மன
ம்


திருப்பரங்குன்றம், 21 ஜூன் (ஹி.ச.)

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் இன்று மாலை ஆனி ஊஞ்சல் திருவிழா 10 நாட்கள் நடைபெறும்.

இவ்விழாவை முன்னிட்டு உற்சவர் சன்னதியில் உள்ள உற்சவர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி தெய்வயானை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு காப்பு கட்டிய

பின்பு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு திருவாச்சி மண்டபத்தில் அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில் சுவாமி எழுந்தருளினர்.

ஊஞ்சல் உற்சவம் ஆனி 6 ந்தேதி முதல்29 ந் தேதி வரை நடைபெறும்.

அங்கு சுவாமிக்கு சிறப்புபூஜை நடைபெற்று

அதன் பின்பு சுவாமி ஆஸ்தான மண்டபத்தை மூன்று முறை வலம் வந்து மீண்டும் உற்சவர் சன்னதிக்கு (சேத்தி) சென்று அடைந்தார் இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகின்ற 29ஆம் தேதி

(ஆனி 15 ஆம் தேதி ) மதியம் 12 மணிக்கு உச்சி கால பூஜைகள் சுவாமிக்கு முக்கனிகள் மா பலா வாழை பழங்கள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெறும்.

அதன் பின்பு மாலை 6 மணிக்கு சுவாமி சிம்மாசன வாகனத்தில் எழுந்தருளி அதன் பின்பு திருப்பரங்குன்றம் முக்கிய ரத வீதிகளின் வழியாக வீதி உலா வந்து மீண்டும் கோயிலை சென்றடைவார்.

இவ்விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி ஞானசேகரன் மற்றும் கோயில் பணியாளர்கள் சிறப்பாக செய்து வருகிறார்கள்.

Hindusthan Samachar / Durai.J